இந்தியை தேசிய மொழியாக ஏற்க முடியாது; குமாரசாமி கருத்து


இந்தியை தேசிய மொழியாக ஏற்க முடியாது; குமாரசாமி கருத்து
x
தினத்தந்தி 28 April 2022 8:48 PM IST (Updated: 28 April 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

அதிக மக்களால் பேசப்படுவதால் இந்தியை தேசிய மொழியாக ஏற்க முடியாது என குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

  நடிகர் சுதீப், இந்தி தேசிய மொழி அல்ல என்று கூறியுள்ளார். இது சரியானது தான். இதில் எந்த தவறும் இல்லை. நடிகர் அஜய் தேவ்கான் இயற்கையாகவே மிகையாக செயல்படும் நபர். ஆனால் அவர் எப்போதும் கேலிக்குரிய வகையிலும் நடந்து கொள்கிறார். கன்னடம், தமிழ், மராட்டி போல் இந்தியும் ஒரு மொழி தான். இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட நாடு. பல்வேறு பண்பாடுகளை கொண்ட மண். 

இதற்கு யாரும் தொந்தரவு செய்ய கூடாது. அதிக மக்களால் பேசப்படுவதால் இந்தி தேசிய மொழியாக ஏற்க முடியாது. 9 மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் இந்தி 2-வது, 3-வது மொழியாகவோ அல்லது அது கற்பிக்கப்படுவதோ இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க அஜய் தேவ்கான் கருத்தில் என்ன உண்மை உள்ளது.
  இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

Next Story