சிறுமியை கர்ப்பிணியாக்கிய ஏசி மெக்கானிக் கைது


சிறுமியை கர்ப்பிணியாக்கிய ஏசி மெக்கானிக் கைது
x
தினத்தந்தி 28 April 2022 9:16 PM IST (Updated: 28 April 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பிணியாக்கிய ஏ.சி.மெக்கானிக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை  கர்ப்பிணியாக்கிய ஏ.சி.மெக்கானிக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவி

குடியாத்தம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து உள்ளார். அவர் பள்ளிக்கு சென்று வரும்போது குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்

 அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், குமரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் குடியாத்தம் பஸ் நிலையம் அருகே அந்த மாணவியை போலீசார் மீட்டனர். 

3 மாத கர்ப்பம்

அந்த மாணவியை குடியாத்தம் கிராமிய காவல் நிலையம் கொண்டு வந்து மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நிர்மலா அந்த மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்

 விசாரணையில் குடியாத்தம் செருவங்கி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் விக்னேஷ் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது 

அப்போது அந்த மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தற்போது மாணவி மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரியவந்தது. 

கைது

இதனையடுதத்து விக்ேனசை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து வேலூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

நீதிபதி உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் விக்னேசை போலீசார் அடைத்தனர். போலீசார் அந்த மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கைதான விக்னேஷ் ஏ.சி.மெக்கானிக் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story