பணத்துக்காக திருமணம் செய்து மோசடி- பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 28 April 2022 9:17 PM IST (Updated: 28 April 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் முடிந்த 3 நாளில் புதுப்பெண் மாயமானார். பணத்துக்காக திருமணம் செய்து மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,
திருமணம் முடிந்த 3 நாளில் புதுப்பெண் மாயமானார். பணத்துக்காக திருமணம் செய்து மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
 திருமணம்
மும்பை மலாடு பகுதியை சேர்ந்த தொழில் அதிபருக்கு சொந்தமாக ஆஸ்பத்திரி உள்ளது. தொழில் அதிபர் அவரது 28 வயது மகனுக்கு பெண் தேடினார். ஆனால் மாற்றுத்திறனாளியாக இருந்ததால் தொழில் அதிபர் மகனுக்கு பெண் கிடைக்கவில்லை. 
இந்தநிலையில் கம்லேஷ் என்ற தரகர் மூலமாக ஆஷா (வயது28) என்ற பெண் தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்ய சம்மதித்தார். ஆஷா தான் ஒரு ஆதரவற்றவர் என்றும், தனக்கு மனிஷா என்ற அத்தை மட்டும் இருப்பதாக தொழில் அதிபரிடம் கூறினார்.
இதை நம்பி தொழில் அதிபர் அவரது மகனுக்கு ஆஷாவை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தவுடன் ஆஷாவின் அத்தை என கூறிய பெண் தொழில் அதிபரிடம் இருந்து ரூ.1½ லட்சம் வாங்கினார். இதேபோல தரகரும் ரூ.10 ஆயிரம் கமிஷன் வாங்கி கொண்டார்.
 பெண் மாயம்
இந்தநிலையில் திருமணம் முடிந்த 3-வது நாள், தான் சீதனமாக கொண்டு வந்த நகைகளை அணிந்து கொண்டு ஆஷா மார்க்கெட் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தொழில் அதிபர் ஆஷாவை தொடர்பு கொண்டார். அப்போது ஆஷா, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாகவும் பணத்திற்காக இந்த திருமணத்தை செய்ததாக தொழில் அதிபரிடம் அதிர்ச்சி தகவலை கூறினார். 
இதுகுறித்து தொழில் அதிபர் மலாடு போலீசில் புகார் அளித்தார். அதில், ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை ஆஷா, மணிஷா மற்றும் தரகர் கம்லேஷ் ஆகியோர் மோசடி செய்ததாக புகாரில் கூறியிருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் இந்த கும்பல் இதே பாணியில் வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story