வருமுன்காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வருமுன்காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 28 April 2022 9:29 PM IST (Updated: 28 April 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

கரியாலூரில் வருமுன்காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் வட்டார மருத்துவமனை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் கரியாலூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உதயசூரியன், மருத்துவர் பிரபாகரன், ராஜேஷ், அருண்குமார் ஆஷாஆர்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் பொய்யாமொழிகுமரன் வரவேற்றார். இதில் மருத்துவகுழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வேங்கோடு கல்யாணகிருஷ்ணன், வெள்ளிமலை ரத்தினம், தொரட்டிபட்டு செல்வராஜ், சாரதா சின்னையன், கவிதா பாக்யராஜ், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை, செல்லதுரை, மலர் ராஜ்குமார், ரபிக் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.


Next Story