கர்நாடகத்தில் தாய் மொழிக்கு தான் முதலிடம்-சி.டி.ரவி எம்.எல்.ஏ. கருத்து


கர்நாடகத்தில் தாய் மொழிக்கு தான் முதலிடம்-சி.டி.ரவி எம்.எல்.ஏ. கருத்து
x
தினத்தந்தி 28 April 2022 9:49 PM IST (Updated: 28 April 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

தாய் மொழிக்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:

இந்தி மொழி குறித்து விவாதம்

  கன்னட நடிகர் சுதீப், இந்தி தேசிய மொழி அல்ல என்று கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது கருத்தை தெரிவித்து பதில் கொடுத்தார். இவர்களின் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  இதுதொடர்பாக சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய
தாவது:-

தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம்

 முதலில் தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். பின்னர் தான் மற்ற மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனாலும் இந்தி மொழியை இணைப்பு மொழியாக சேர்த்து கொள்வதில் தவறில்லை. பிரதமர் மோடியை தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க கூறியுள்ளார்.

  ஆங்கிலேயர்கள் ஒரு காலத்தில் ஆங்கில மொழியை விட்டுசென்றார்கள். ஆனால் இந்தி நம் நாட்டில் ஒரு முக்கியம் வாய்ந்த மொழியாக உள்ளது. நாட்டில் 48 சதவீதம் பேர் இந்தியை தாய் மொழியாக கொண்டுள்ளனர். அதனால் இந்தி மொழி குறித்து நடிகர்கள் தனிப்பட்ட அர்த்தத்தை உருவாக்கி அதை பெரிதாக்க வேண்டாம்.
  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story