இறந்த பெண் யானையின் உடல் அடக்கம்


இறந்த பெண் யானையின் உடல் அடக்கம்
x
தினத்தந்தி 28 April 2022 9:51 PM IST (Updated: 28 April 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

இறந்த பெண் யானையின் உடல் அடக்கம்

பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி முகாமில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி(வயது 71) என்ற பெண் யானை நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தது.


இந்த நிலையில் வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் விஜயன் தலைமையில் வனச்சரகர் காசிலிங்கம், வனவர் சேகர் மற்றும் வனத்துறையினர், பாகன்கள் ஆகியோர் யானையின் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வனத்துறையினர், இயற்கை வரலாறு அறக்கட்டளை, யானை பணியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் மற்றும் டாக்டர்கள் குழு மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. யானையின் உடற்பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டது. பின்னர் யானையின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story