கோழிப்பண்ணைகளை வாரம் ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும்


கோழிப்பண்ணைகளை வாரம் ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 28 April 2022 9:52 PM IST (Updated: 28 April 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

கோழிப்பண்ணைகளை வாரம் ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே திம்மநாயக்கன்பாளையம் கிராமத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பண்ணையில் இறக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல், குடியிருப்பு பகுதியில் வீசுவதாக புகார் எழுந்தது. அதை தின்னும் நாய்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதாக கூறப்பட்டது. மேலும் இறந்த நாய்களையும் அப்புறப்படுத்தாததால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது தவிர ஈக்கள் படையெடுப்பால், கிராம மக்கள் அவதி அடைந்தனர். மேலும் தொண்டை நோய், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை இருந்தது.

இதையடுத்து திம்மநாயக்கன்பாளையம், சித்தநாயக்கன்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் இன்று சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவமணி, முத்துராஜ், சுகாதார அதிகாரி டாக்டர் வனிதா, மேற்பார்வையாளர் முருகதாஸ், ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் வாரம் ஒருமுறை கோழிக்கழிவுகளை அகற்றி பண்ணையை சுத்தப்படுத்த வேண்டும், நன்கு கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நோட்டீஸ் வழங்கி உரிமம் ரத்து செய்யப்படும் என்று உரிமையாளர்களை எச்சரித்தனர். 



Next Story