காங்கிரஸ்-ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கைகலப்பு
காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பால் காகித நகர் பகுதியில் பரபரப்பு உண்டானது.
சிவமொக்கா:
பிறந்தநாள் கொண்டாட்டம்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா காகித
நகர் பகுதியை சேர்ந்தவர் கிரீஸ். காங்கிரஸ் பிரமுகர். இவர் தனது மைத்துனருடன் சேர்ந்து ராம மந்திர் சதுக்கம் அருகே பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவர் சென்றார். அவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆவார். அப்போது அவரை கிரீஸ் மற்றும் அவரது உறவினர் வழிமறித்தனர்.
உடனே அவர்கள் நாங்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளோம், நீ பா.ஜனதாவை சேர்ந்தவன் என கூறி வாக்குவாதம் செய்தாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சினீவாசாவை அவர்கள் தாக்கினர். இதில் அவர் நிலைதடுமாறி கீேழ விழுந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடைய சீனிவாசாவின் நண்பர்களான தமிழகத்தை சேர்ந்த மணி மற்றும் ஜெயராம் ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்கள் 3 பேரும் சேர்ந்து காங்கிரஸ் பிரமுகர்களை தாக்கினர். இதையடுத்து இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காகித நகர் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர்.
வழக்குப்பதிவு
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது இருப்பிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருதரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சீனிவாச ரெட்டி ஆ.எஸ்.எஸ் பிரமுகர் என்பதால் அவரிடம் காங்கிரஸ் பிரமுகர்கள் தகராறு செய்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story