பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
உடுமலை அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
போடிப்பட்டி
உடுமலை அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவி
உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் சுவாமிநாதன் (வயது 22). சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாணவிக்கு காதல் வலை வீசிய சுவாமிநாதன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர் வீட்டிலிருந்த அந்த மாணவி மாயமானார்.
போக்சோவில் கைது
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குமரலிங்கம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆதம்ஷா, முருகவேல் தலைமையில் சிறப்புப்படை அமைத்து மாணவியை தேடி வந்தனர். அதில் சுவாமிநாதன் அந்த மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சுவாமிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் பள்ளி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சரக்கு ஆட்டி டிரைவர் ஒருவர் பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story