ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜாண், மீனவர். இவரது மனைவி பரிமளா (வயது35). தற்போது இவர்கள் காமராஜர் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பரிமளா நேற்று மதியம் ஸ்கூட்டரில் வீட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டார். சிறிது தூரம் சென்றதும் சாலையில் வேகத்தடை இருந்ததால் பரிமளா ஸ்கூட்டரின் வேகத்தை குறைத்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த நபர் திடீரென பரிமளாவின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க சங்கிலிைய பறிக்க முயன்றார். அதிர்ஷ்டவசமாக சங்கிலி அறுந்து ெகாள்ளையன் கையில் சிக்காமல், கீழே விழுந்தது. அத்துடன் பரிமளா நிலை தடுமாறிய கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர். உடனே வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் பரிமளாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, பரிமளாவிடம் நகை பறிக்க முயலும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், இந்த காட்சியின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story