கோழியை உயிரோடு தோலை உரித்து துன்புறுத்திய இறைச்சிக்கடை ஊழியர் கைது


கோழியை உயிரோடு தோலை உரித்து துன்புறுத்திய இறைச்சிக்கடை ஊழியர் கைது
x
தினத்தந்தி 28 April 2022 10:23 PM IST (Updated: 28 April 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே கோழியை உயிரோடு தோலை உரித்து துன்புறுத்திய இறைச்சிக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே கோழியை உயிரோடு தோலை உரித்து துன்புறுத்திய இறைச்சிக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சமூகவலைதளத்தில் வீடியோ வைரல்
கறிக்கோழியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த கோழியை அசைவ பிரியர்களின் வர பிரசாதம் என்றே கூறலாம்.
அத்தகைய கோழியை இறைச்சி கடை ஊழியர் ஒருவர், தலையை வெட்டாமல் முதலில் கோழியின் தோலை உரித்தபடி துடிக்க துடிக்க துன்புறுத்தும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
ஊழியர் கைது
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், கோழியை துன்புறுத்தியவர் குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கண்ணனாகம் பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்த ஊழியரான செங்கவிளையை சேர்ந்த மணி என்பவரது மகன் மனு (வயது 40) என்பது தெரியவந்தது.
அதாவது அவர் மதுபோதையில் ஈஸ்டர் பண்டிகையின் போது வாடிக்கையாளர்களுக்கு இறைச்சியை வெட்டி கொடுத்த போது கோழியின் தலையை வெட்டாமல் தோலை முதலில் உரித்து சித்ரவதை செய்ததோடு வீடியோ எடுத்து பரப்பியதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தாமாக முன்வந்து கொடுத்த புகாரின் பேரில் விலங்குகளை சித்ரவதை செய்தல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் மனு என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் கைது செய்தார்.

Next Story