கண்ணாடி விரியன்பாம்பு பிடிபட்டது


கண்ணாடி விரியன்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 28 April 2022 10:39 PM IST (Updated: 28 April 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே கண்ணாடி விரியன்பாம்பு பிடிபட்டது

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே அதிபெரமனூர் பகுதியில் வசித்து வருபவர் தென்னரசு (வயது 50). இவரது வீட்டின் வராண்டாவில் இன்று இரவு 8 மணியளவில் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன்பாம்பு இருந்தது. 

இதனை கண்டு வீட்டில் இருந்த அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியேறினர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர்  விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி  பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கண்ணாடி விரியன்பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

Next Story