விமானம் மூலம் மாமல்லபுரம் விடுதிக்கு வரவழைத்து உல்லாசம்: மும்பை அழகியிடம் கத்திமுனையில் செல்போன், பணம் பறித்த 3 பேர் கைது
விமானம் மூலம் மும்பை அழகியை மாமல்லபுரம் விடுதிக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து விட்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடிகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்,
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). இவர் உல்லாசம் அனுபவிப்பதற்காக தனது செல்போனில் இணைய செயலி மூலம் மும்பையை சேர்ந்த அழகியை மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் உள்ள ஒரு விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். ஒரு இரவு உல்லாசம் அனுபவிப்பதற்கு ரூ.20 ஆயிரம் தருவதாகவும் கூறி நம்ப வைத்து அப்பெண்ணை விமானம் மூலம் சென்னைக்கு வரவழைத்துள்ளார்.
பின்னர் மாமல்லபுரத்திற்கு கால் டாக்சி மூலம் அந்த பெண்ணை வரவழைத்து விடுதிக்கு அழைத்து சென்று ராஜேஷ் உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் அவரது நண்பர்களான சேலையூரை சேர்ந்த தீனதயாளன் (39), பெரும்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன் (39) ஆகிய 2 பேருடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். மது அருந்திவிட்டு 3 பேரும் விடிய, விடிய அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், காலை விடிந்தவுடன் அந்த இளம்பெண் தான் குறிப்பிட்ட நேரத்தில் மும்பைக்கு செல்ல வேண்டும் என்றும் உடனடியாக பேசிய தொகை ரூ.20 ஆயிரத்தை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ், தீனா இருவரும் சேர்ந்து மும்பை அழகியை கத்தியை எடுத்து காட்டி மிரட்டியபடி அவரிடமிருந்து செல்போன், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து மும்பை அழகி மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்,
பிறகு மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் உத்தரவின்பேரில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி மூலம் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் இருந்து செல்போன், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், மும்பை அழகியிடம் கொடுத்து மும்பைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் ஏற்கனவே 2 கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும், அதேபோல் அவரது கூட்டாளி தீனதயாளன் சென்னை புறநகரில் 2014-ல் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர் என்றும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் ரவுடிகள் ராஜேஷ், தீனதயாளன் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 3 பேரும் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story