ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை அவுரித்திடலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் மதன்ராஜ் வரவேற்றார். மாநில மகளிர் அணி செயலாளர் கவுசல்யா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். 30 ஆண்டுகள் பணியாற்றியதை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும்.
ஊக்கத்தொகை
ஊராட்சி ஒன்றியங்களில் 18 ஆண்டுகள் தற்காலிகமாக பணியாற்றி வரும் சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்.
கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சத்தை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story