அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஒன்றிய அளவிலான மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
மடத்துக்குளம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஒன்றிய அளவிலான மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
மாநாடு
மடத்துக்குளம் தாலுகா கழுகரையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஒன்றிய அளவிலான 5-வது மாநாடு நடந்தது. இதன் தொடக்கத்தில் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து அனைவரும் வணக்கம் செலுத்தினர்.
மாநாட்டுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கன்னித்தாய் தலைமை தாங்கினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
காலமுறை ஊதியம்
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கும், 25 ஆண்டுகளாக பணியாற்றிய பணியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பணியாளர்களுக்கு பணி கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். 3 வருடம் பணி முடித்த மினி மைய பணியாளர்களை மெயின் மைய பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும்.
உதவியாளர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். சிலிண்டர் செலவினதொகையை உயர்த்தி தரவேண்டும். முட்டைகளை மையத் திலேயே வழங்க வேண்டும். சில்லறை செலவின தொகையை ரூ.100 ஆக உயர்த்தி தரவேண்டும், காய்கறி செலவுத் தொகையை அந்தந்த மாதமே வழங்க வேண்டும். பதிவேடுகளை அரசே வழங்க வேண்டும். காலி ப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொறுப்பு பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்திட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க கிளை தலைவர் விமலா, செயலாளர் தெய்வலட்சுமி, பொருளாளர் சத்தியபாமா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கல்பனா, மதுமதி உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story