குத்தாலம் பேரூராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை


குத்தாலம் பேரூராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 28 April 2022 11:13 PM IST (Updated: 28 April 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் பேரூராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

குத்தாலம்
குத்தாலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது மற்றும் நிலத்தடி நீரின் நிறம் மாறுபடுவதை கருத்தில்கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள 1,042 குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் குத்தாலம் பேரூராட்சி பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்ட ஆய்வு பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் சுபத்ராவிடம், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், துணைத்தலைவர் சம்சுதீன், செயல் அலுவலர் ரஞ்சித் ஆகியோர் வழங்கினர். இதன்மூலம், குத்தாலம் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story