2024-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்


2024-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
x
தினத்தந்தி 28 April 2022 11:17 PM IST (Updated: 28 April 2022 11:17 PM IST)
t-max-icont-min-icon

2024-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என வேதாரண்யத்தில் முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு கூறினார். வரவேற்பு

வேதாரண்யம்:
2024-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என வேதாரண்யத்தில் முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு கூறினார்.
வரவேற்பு
உப்புசத்யாகிரக போராட்டத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏப்ரல் 30-ந் தேதி வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளியில் உப்பு அள்ளும் வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்று  வருகிறது.
இதை முன்னிட்டு திருச்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு தலைமையில் பாதயாத்திரை தொடங்கப்பட்டது.
 இந்த குழுவினர் கல்லணை, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம் வழியாக சென்று வேதாரண்யம் வந்தடைந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், குருகுல நிர்வாகி வேதரெத்தினம், வட்டார தலைவர் ஜெகநாதன், நகர தலைவர் வைரம், வர்த்தக அணி அப்சல் உசேன், சிறுபான்மை மாவட்ட தலைவர் மையா ரபீக், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஆரோபால்ராஜ்  உள்பட பலர் கலந்து கொண்டனர். 
பேட்டி
பின்னர் முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.  மத்தியில் 3-வது அணி அமையாது.  தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் பெண் உரிமைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போராடுகிறார். 
தமிழக மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படுகிறது. மத்திய அரசு சிறு,குறு உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறது. இந்தியாவில் தலை சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின்  விளங்குகிறார். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story