செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ1 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ1 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 49). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வரும் இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த 16-ந் தேதியன்று ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் செல்போன் கோபுரம் அமைக்க நிலம் தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பாலசுப்பிரமணியன், அந்த குறுந்தகவலில் இருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது எதிர்முனையில் பேசிய மர்மநபர், உங்களுடைய இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதியளித்தால் ரூ.20 லட்சம் முன்பணமும் மற்றும் மாதந்தோறும் வாடகையாக ரூ.25 ஆயிரமும் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய பாலசுப்பிரமணியன், மர்மநபரின் வங்கி கணக்கு எண்ணுக்கு கூகுள்பே மூலம் 4 தவணையாக ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 999-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர், செல்போன் கோபுரம் அமைப்பதற்காக எந்த பணிகளிலும் ஈடுபடவில்லை, பாலசுப்பிரமணியன் கொடுத்த பணத்தையும் திரும்பி தராமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து பாலசுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story