கர்நாடகா மாநிலத்துக்கு வேலைக்கு சென்ற ரிக் வண்டி மேலாளரை மீட்டுத் தரவேண்டும் கலெக்டரிடம் மனு
கர்நாடகா மாநிலத்துக்கு வேலைக்கு சென்ற ரிக் வண்டி மேலாளரை மீட்டுத் தரவேண்டும் கலெக்டரிடம் மனு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள டி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் நாகராஜன் (வயது 29). ரிக் வண்டி மேலாளர். இவருக்கு திருமணமாகி நதியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
நாகராஜன் கடந்த 5-ந் தேதி கர்நாடக மாநிலம் கல்கட்டி பகுதியில் ரிக் வண்டிக்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 19-ந் தேதி அவருடைய மனைவி நதியாவிடம் பேசி உள்ளார். அதன்பிறகு அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி உள்ளது. எனவே தனது கணவரை மீட்டு தரக்கோரி நதியா நேற்று உறவினர்களுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தார்.
Related Tags :
Next Story