சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாடை கட்டி ஊர்வலமாக சென்று நூதன போராட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாடை கட்டி ஊர்வலமாக சென்று நூதன போராட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி:-
திருத்துறைப்பூண்டி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாடை கட்டி ஊர்வலமாக சென்று நூதன போராட்டம் நடந்தது.
நூதன போராட்டம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் இருந்து தலைக்காடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதை சீரமைக்க கோரியும், பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்காததை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பாடை கட்டி ஊர்வலமாக சென்று நூதன போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு கட்சியின் ஆதிரங்கம் கிளை செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம்
பாடை ஊர்வலம் சாலைகடை பகுதியில் தொடங்கி ஆதிரங்கம் வரை நடந்தது. இந்த ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட பாடையில் ஒருவர் பிணம்போல் மாலை அணிந்து படுத்து இருந்தார். அந்த பாடையை ஊர்வலமாக தூக்கி சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருத்துறைப்பூண்டி கிராம ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், பொறியாளர் சூரியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சிவசங்கரி, திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story