ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்து ஊழியர் சாவு


ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்து ஊழியர் சாவு
x
தினத்தந்தி 28 April 2022 11:41 PM IST (Updated: 28 April 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி சித்திரை திருவிழாவில் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பரமக்குடி,

பரமக்குடி சித்திரை திருவிழாவில் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

ராட்டின ஊழியர்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மல்லிகை நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 52). இவர் பரமக்குடியில் நடந்த சித்திரை திருவிழாவிற்காக வைகை ஆற்றின் கரையோரத்தில் வாணியம்பாடியைச் சேர்ந்த மோகன் என்பவர் போட்டிருந்த ராட்டினத்தில் வேலை பார்த்துள்ளார். 
சம்பவத்தன்று ராட்டினத்தில் ஆட்களை ஏற்றி விட்டு ராட்டின பெட்டியை தள்ளி விடும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது ராட்டின பெட்டி ேமாதியது.

சாவு

இதில் தடுமாறிய அவர் ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் முழங்கை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் பரமக்குடி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அரவிந்த் (26) கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சித்திரை திருவிழாவின் போது ராட்டினத்தில் இருந்து ஊழியர் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story