ஆஞ்சநேயர் கோவிலில் ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்


ஆஞ்சநேயர் கோவிலில் ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 28 April 2022 11:43 PM IST (Updated: 28 April 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

ஆஞ்சநேயர் கோவிலில் ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை தெற்கு 4-ம் வீதி மார்க்கெட் சந்திப்பில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்ேகாவிலில் அரசு பொதுத்தேர்வு எழுதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கல்வி வழிபாடு லெட்சுமி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளில் தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபையினரால் விருதுகள் வழங்கி பாராட்டப்படும். மேலும் மாணவ-மாணவிகளுக்கு பேனா, குறிப்பேடுகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் இந்துசமய அறநிலையத்துறை பாக்கியராஜ், இலக்கியப்பேரவை நிலவைப்பழனியப்பன், கல்வியாளர்கள் மாலதி, செந்தில்வேல் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story