இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
அன்னவாசல்:
அன்னவாசல் ஒன்றியம் புல்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சி தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு எழுது பொருட்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி வழங்கினார். பின்னர் கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காலங்களில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைத்திடும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் கவிதாராமு ஆலோசனையின் படியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டல் படியும் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக புல்வயல், சண்டப்பட்டி, கொல்லம்பட்டியை சேர்ந்த இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு இல்லம்தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளித்தலைமை ஆசிரியர் ஆகியோர் கற்றல் கற்பித்தலுக்கான துணைக்கருவிகள், எழுது பொருட்களை வழங்கினார்கள். இதில் புல்வயல் பள்ளி ஆசிரியர்கள் பாலாமணி, கலைவாணி, சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story