ராமேசுவரத்தில், பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்


ராமேசுவரத்தில், பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 April 2022 11:46 PM IST (Updated: 28 April 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

மாணவரை தாக்கிய டிரைவர் மீது நடவடிக்கை கோரி ராமேசுவரத்தில், பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம், 

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கோவிலின் மேற்கு ரதவீதி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பஸ் நிலையம் செல்வதற்காக அந்த பஸ்சில் ஏறி உள்ளனர். பஸ் நிலையம் அருகே வரும்போது மெயின் சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்கு திரும்புவதற்காக அந்தப் பஸ்சின் டிரைவர் செந்தில்குமரன் வேகமாக திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்த மாணவர்கள் தடுமாறி பஸ்சுக்குள் கீழே விழுந்துள்ளனர். பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்திய பின்னர் டிரைவர் செந்தில் குமரன் மாணவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பஸ் நிலையத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமேசுவரம் நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ், தாசில்தார் அப்துல் ஜப்பார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் இருவரையும் விசாரணைக்காக ேபாலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story