நச்சலூர் அருகே 3 காளை கன்றுகளை ஈன்ற அதிசய பசுமாடு
நச்சலூர் அருகே 3 காளை கன்றுகளை ஈன்ற அதிசய பசுமாட்டை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
நச்சலூர்,
கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சி, குறிச்சி சாலை மேடுபகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 50). விவசாயி. இவர், தனது வீட்டில் 3 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசு மாடு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 3 காளை கன்றுகளை ஈன்றது. இதையடுத்து சிறிது நேரத்தில் 3 காளை கன்றுகளும் தனது தாய் பசுவிடம் பால் குடித்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் 3 காளை கன்றுகளை ஈன்ற பசுமாட்டை அதிசயத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து விவசாயி அய்யாதுரை கூறுகையில், பசுமாடு என்பது ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு கன்றுகளை ஈனும். ஆனால் எனது பசுமாடு 3 காளை கன்றுகளை ஈன்றது எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது, தற்போது பசுவும், 3 காளை கன்றுகளும் நலமுடன் உள்ளது என்றார்.
Related Tags :
Next Story