இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொதுக்கூட்டம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். திருமருகல் ஒன்றிய செயலாளர் பாலு வரவேற்றார். படித்த இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு, ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் சிங்காரவேல், மாநில துணைத் தலைவர் ஜோதிபாசு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story