சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை


சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 28 April 2022 11:51 PM IST (Updated: 28 April 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல்:
சித்திைர மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
வெள்ளிகவச அலங்காரம்
ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று நந்திக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது நந்தி வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
இதையொட்டி கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் ஆவுடையார் கோவிலிலும் பிரதோஷ விழா நடந்தது. இதில் பாச்சல், குருசாமிபாளையம், புதுச்சத்திரம், கல்யாணி கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காசி விஸ்வநாதர் கோவில்
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. 
அதன்படி பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சிவபெருமான், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story