முள்ளுக்குறிச்சியில் விவசாயிகள், மலைவாழ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


முள்ளுக்குறிச்சியில் விவசாயிகள், மலைவாழ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2022 11:51 PM IST (Updated: 28 April 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

முள்ளுக்குறிச்சியில் விவசாயிகள், மலைவாழ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம்:
கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சியில் உள்ள வனச்சரக அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கால்நடைகளுடன் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும், மேய்ச்சலுக்கு தடை விதித்த ஐகோர்ட்டு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழக அரசு ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து மலைவாழ் மக்களுக்கான மேய்ச்சல் உரிமையை பெற்று தர வலியுறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story