வேலூர் பேரூராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் பேரூராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2022 11:51 PM IST (Updated: 28 April 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் பேரூராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டம் வேலூர் பேரூராட்சியில் 18-வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க, பா.ம.க., சுயேச்சை உள்ளிட்ட 5 பேர்களின் வார்டுகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பேரூரட்சி தலைவர் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் கூறி அ.தி.மு.க, பா.ம.க மற்றும் சுயேச்சை வார்டு உறுப்பினர்கள் 5 பேர் பேரூராட்சி அலுவலகத்தின் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற வேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேரூராட்சி தலைவரிடம் கேட்டபோது, 5 வார்டு உறுப்பினர்களும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறினார். 

Next Story