ஆன்லைன் மூலம் ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 29 April 2022 12:04 AM IST (Updated: 29 April 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

ஓமன் போலீசார் எனக்கூறி ஆன்லைன் மூலம் ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து கரூர் சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

கரூர், 
புகார் 
கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ந்தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், பேஸ்புக்கில் செல்போன் விற்பனைக்கு என்ற விளம்பரத்தை பார்த்து லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் இருந்த வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு செல்போன் ஆர்டர் செய்ததாகவும், அப்போது ஓமன் கஸ்டம்ஸ் மற்றும் போலீசார் பேசுவதாக மிரட்டி, ஏமாற்றி ரூ.7 லட்சத்து ஆயிரத்து 900 பணம் பெற்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளிக்கப்பட்டது. 
பணம் மோசடி
இந்த வழக்கு சம்பந்தமாக சைபர் கிரைம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அம்சவேணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர்.  அப்போது திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பாதேல் டெபர்மா, ஜெதிராய் மோல் சோல், இஷாபகதூர் மால்சம் மற்றும் சுராஜித் டெபர்மா ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
2 பேர் கைது
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் பாதேல் டெபர்மா, ஜெதிராய் மோல் சோல் ஆகியோர் பெங்களூரில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று பாதேல் டெபர்மா, ஜெதிராய் மோல் சோல் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story