மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்,
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு கரூர் மாவட்ட மைய தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட செயலாளர் இளங்கோ, பொருளாளர் ஞானபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 1,200-க்கும் மேற்பட்ட காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பட்டய மருந்தாளுனர்களின் வேலைவாய்ப்பினை பாதிக்கும் அரசாணை எண்.5-ஐ கைவிட வேண்டும். மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள் மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.
39 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முறையாக பணி நியமனம் செய்யப்பட்ட மருந்தாளுனர்கள் 9 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி வரன்முறை செய்திட வேண்டும். 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கிட வேண்டும். 42 துணை இயக்குனர் அலுவலக மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story