புதிதாக தொடங்கப்பட்டு உள்ள ஜீனூர் அரசு தோட்டக்கலை கல்லூரியில் 47 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்-கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தகவல்
ஜீனூர் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டில் 47 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
ஜீனூர் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டில் 47 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
அரசு தோட்டக்கலை கல்லூரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் பையூர் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள தோட்டக்கலை கல்லூரியில் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி குத்துவிளக்கேற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பேசியதாவது:-
நிதி ஒதுக்கீடு
அரசு தோட்டக்கலைப்பண்ணை ஜீனூரில் 150 ஏக்கர் நிலம் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பையூர் வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வகுப்புகள் நடைபெற கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு கல்லூரி செயல்பட உள்ளது.
இந்த கல்லூரிக்கு முதல் தவணையாக தமிழ்நாடு அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கு இளநிலை முதலாமாண்டு பி.எஸ்சி. மற்றும் பி.எஸ்சி. தோட்டக்கலை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டில் 47 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜீவஜோதி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, பையூர் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய முதல்வர் பரசுராமன், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், பையூர் வேளாண் பல்கலைக்கழக மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய உறுப்பினர்கள் கோவிந்தராஜ், விவசாயிகள் சிற்றரசு, சாந்தகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story