காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி பலாத்காரம்; ஓட்டல் உரிமையாளர் கைது


காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி பலாத்காரம்; ஓட்டல் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 12:09 AM IST (Updated: 29 April 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி பலாத்காரம் செய்ததாக ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவியரசு (வயது 24). இவர் அதே பகுதியில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் இவர் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், இருவரும் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவி தன்னை கவியரசு பாலியல் பலாத்காரம் செய்ததாக காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசுவை நேற்று கைது செய்தனர்.

Next Story