அரூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை
அரூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அரூர்:
அரூர் அருகே உள்ள பையர் நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், தொழிலாளி. இவருடைய மூத்த மகள் ரம்யா (வயது 18). இவர் அரூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் செல்போனில் அதிகநேரம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பெற்றோர் கேட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்யா விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மாணவி தற்கொலை தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story