215 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சிவகாசியில் அதிகாரிகளின் திடீர் சோதனையில் 215 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி
சிவகாசியில் அதிகாரிகளின் திடீர் சோதனையில் 215 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்கள்
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் பிளாஸ்டிகள் கழிவுகள் அதிக அளவில் இருந்தது. இது குறித்து தினத்தந்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியின் அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
பறிமுதல்
இந்த நிலையில் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரிகள் தலைமையில் கடைகளில் திடீர் சோதனை செய்யப்பட்டது. இதில் சாட்சியாபுரத்தில் சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் ஆகியோர் ஈடுபட்டனர்.
சிவகாசி மாநகராட்சி பகுதியில் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த திடீர் சோதனையில் மட்டும் சுமார் 215 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரூ.2900 அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story