அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் தற்கொலை
கடன் பிரச்சினையால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
தரகம்பட்டி,
அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரவணை கிராமம் சின்னாண்டிபட்டியை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 52). இவர் கடவூர் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.
தற்கொலை
இந்நிலையில் கடன் பிரச்சினை அதிகமாக இருந்ததால் காத்தமுத்து மன வேதனையில் இருந்து வந்துள்ளார், இதனால் கடந்த 3 நாட்களாக விடுப்பில் வீட்டில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தினை சாப்பிட்டு விட்டு ஒரு அறையில் மயங்கி கிடந்தார்.
இதைக்கண்ட விஜயலட்சுமி அக்கம், பக்கத்தினரை அழைத்து வந்து பார்த்தபோது காத்தமுத்து ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து காத்தமுத்துவின் மனைவி விஜலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story