ஓசூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சியில் தண்ணீர் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பதை கண்டித்து, ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மேலும் இதில் கிருஷ்ணகிரி மாவட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்க (கிரிடிஸ்டியா) தலைவர் கே.ராமலிங்கம், அரிமா சங்க மூத்த தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தண்ணீர் கட்டணம், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story