மாரியம்மன் கோவில் திருவிழாவில் போலீஸ் மண்டகப்படி நிகழ்ச்சி
அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் போலீஸ் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இதில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி என்னவென்றால் கடந்த 53 ஆண்டுகளாக போலீஸ் பொதுமக்கள் நல்லுறவைப் பேணும் வகையில் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது போலீஸ் மண்டகப்படி என்னும் ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதே போன்று இந்த ஆண்டும் 54-வது ஆண்டாக அரவக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் போலீஸ் மண்டகப்படி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் போலீசார் குடியிருப்புகளில் இருந்து போலீசாரின் குடும்பத்தினர் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று பொதுமக்களுடன் சேர்ந்து மாரியம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Related Tags :
Next Story