பிளஸ்-1 மாணவர் தற்கொலை
முதுகுளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 17). பிளஸ்-1 மாணவர். இவரது தந்தை செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதால் தாயார் தமிழ்ச்செல்வி மகனை பராமரித்து வந்தார். இந்த நிலையில் ஈஸ்வரமூர்த்தி, தாயார் தமிழ்ச்செல்வியிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு அடம்பிடித்தாக கூறப்படுகிறது. அவரது தாயார் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார்.
இதில் மனமுடைந்த ஈஸ்வரமூர்த்தி, தாத்தா துரைராஜ் தோட்டத்தின் பம்பு செட் அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கீழத்தூவல் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story