அண்ணியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
வெள்ளியணையில் அண்ணியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வெள்ளியணை,
குடும்ப சண்டை
கரூர் மாவட்டம், வெள்ளியணை வடக்கு லட்சுமி நகரை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 28).இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மது போதையில் வீட்டிற்கு வந்த சூர்யபிரகாஷ் தனது அம்மாவுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதை அங்கிருந்த சூரிய பிரகாஷின் அண்ணன் மணிவேலின் மனைவி வைஷ்ணவி (23) தடுத்துள்ளார்.
இதனால் அண்ணி வைஷ்ணவி மீது ஆத்திரம் கொண்ட சூரியபிரகாஷ் கத்தியை எடுத்து அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவி தன்னை காப்பாற்றி கொள்ள அருகில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் கண்ணாடி அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.
கத்திக்குத்து
ஆனாலும் விடாமல் துரத்தி சென்ற சூரியபிரகாஷ் கண்ணாடி அறையின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று கத்தியால் குத்தியபோது தடுத்ததால் வைஷ்ணவிக்கு கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில்வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து சூரியபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story