அறந்தாங்கியில் கட்டிட இடைவெளியில் சிக்கிய கோவில் காளை உயிருடன் மீட்பு அங்கன்வாடி சுவற்றை இடித்து காப்பாற்றினர்
கட்டிட இடைவெளியில் சிக்கிய கோவில் காளை உயிருடன் மீட்க்கப்பட்டது.
அறந்தாங்கி:
அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் அருகே அங்கன்வாடி பள்ளி கட்டிடத்தின் பின்புறம் உள்ள மிகச் சிறிய கட்டிடங்களில் சந்தில் கோவில் காளை ஒன்று சிக்கி கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர் வெற்றிசெல்வன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காளையின் கொம்பில் கயிற்றை கட்டி இழுத்து பார்த்த போது முடியவில்லை. இதையடுத்து அருகில் அங்கன்வாடி பள்ளி கட்டிட ஜன்னல் இருந்துள்ளது. பின்னர் ஜன்னலையும், சுவரையும் இடித்து காளை மாட்டை அங்கன்வாடி பள்ளியின் உள்பக்கமாக பத்திரமாக மீட்டனர்.
Related Tags :
Next Story