ஆண்டாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
ஆண்டாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதற்காக ஆண்டாள் கோவில் மற்றும் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் கோவில், சக்கரத்தாழ்வார் சன்னதி, பெரியாழ்வார் சன்னதி ஆகிய கோவில்களில் உள்ள உண்டியல்களும் ஆண்டாள் கோவிலில் வழக்கமாக உண்டியல் எண்ணும் மைய மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் உதவி ஆணையர் கருணாகரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஆய்வாளர் பாண்டியன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது, அதில் பக்தர்கள் செலுத்திய 17 லட்சத்து 28 ஆயிரத்து 143 ரூபாய் இருந்தது. அதே போல் தங்கம் 40 கிராம், வெள்ளி 130 கிராம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்களும், தேர்வு செய்யப்பட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story