மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை


மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை
x
தினத்தந்தி 29 April 2022 12:33 AM IST (Updated: 29 April 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறலாம் என மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர், 
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற 6-ந்தேதிக்குள் தேவையான ஆவணங்களான தேசிய அடையாள அட்டை நகல், முகம் மட்டும் தெரியக்கூடிய புகைப்படம்-4 (பாஸ்போர்ட் அளவு), ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை சார்ந்த எவரேனும் நேரில் வந்து சமர்ப்பித்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி  தெரிவித்துள்ளார்.

Next Story