ஸ்கூட்டரில் சாராயம் கடத்தியவர் கைது


ஸ்கூட்டரில் சாராயம் கடத்தியவர் கைது
x

புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்கு ஸ்கூட்டரில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று விழுப்புரம் பானாம்பட்டு பாதையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் 30 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

விசாரணையில் அவர், விழுப்புரம் அருகே வளவனூரை சேர்ந்த மோகன்தாஸ் (வயது 52) என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மோகன்தாசை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஸ்கூட்டருடன் சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story