ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
வேப்பந்தட்டையில் உள்ள ரேஷன் கடையில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆய்வு செய்தார்
பெரம்பலூர்,
கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேற்று திடீரென்று சென்று ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அங்கன்வாடி மையம்
இதையடுத்து, அலுவலகத்தில் பயன்பாட்டில் உள்ள கோப்புகள் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? எனவும் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அதனருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டார்.
அப்போது குழந்தைகளுக்கு வழங்க தயாராக இருந்த சத்துணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமை பொருட்கள் தரமானதாகவும் மற்றும் சரியான அளவில் வினியோகிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, கலெக்டரின் அலுவலக மேலாளர் சிவா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சித்ரா மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story