பலியான 11 பேரின் வீட்டிற்கு சென்று தேவைகளை கேட்டறிந்த கலெக்டர்


பலியான 11 பேரின் வீட்டிற்கு சென்று தேவைகளை கேட்டறிந்த கலெக்டர்
x
தினத்தந்தி 29 April 2022 1:12 AM IST (Updated: 29 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே களிமேட்டில் பலியான 11 பேரின் வீட்டிற்கு சென்று அவர்களின் தேவைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டறிந்தார்.

தஞ்சாவூர்:
தஞ்சை அருகே களிமேட்டில் பலியான 11 பேரின் வீட்டிற்கு சென்று அவர்களின் தேவைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டறிந்தார்.
11 பேர் பலி
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. அப்போது தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் பலியானார்கள். 17 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தஞ்சை தொகுதி எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேற்று பார்த்து ஆறுதல் கூறினார்.
வீட்டிற்கு சென்ற கலெக்டர்
இந்த நிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதிகாரிகளுடன் களிமேடு கிராமத்துக்கு நேற்று காலை சென்றார். அப்போது அவர் பலியான 11 பேரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு என்னென்ன தேவைகள் என்பது குறித்து கேட்டறிந்தார். அதனை கலெக்டர் குறிப்பெடுத்துக்கொண்டார்.
அப்போது பாதிக்கப்பட்ட ஒரு பெண் எனக்கு விதவை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், சிலர் பட்டா வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்தனர். இந்த கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கலெக்டருடன் தாசில்தார் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

Next Story