பூதப்பாண்டி பகுதியில் கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு
பூதப்பாண்டி பகுதியில் கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு
நாகர்கோவில்
அமெரிக்காவில் இருந்து குமரிக்கு வந்த பெண் என்ஜினீயர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது அவர் நேற்று முன்தினம் வழக்கமான பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அப்ேபாது அவரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. அவருக்கு தொற்று பாதிப்பு குறைவாக உள்ளதாக தெரிகிறது. எனினும் அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story