விவசாயி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை-பணம் திருட்டு


விவசாயி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 29 April 2022 1:21 AM IST (Updated: 29 April 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 
விவசாயி 
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கீழ கபிஸ்தலம் அக்ரஹாரம்  சான்றோர் தோப்பு தெருவில் வசிப்பவர் பாஸ்கரன். விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது47). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 
ஒரு மகன் பெங்களூருவிலும், ஒரு மகன் ஒசூரிலும் பணியாற்றி வருகின்றனர். 
இந்தநிலையில் நேற்று காலை பாஸ்கரன் விவசாய பணிக்கும், அவரது மனைவி கூலி வேலைக்கும் சென்றுவிட்டனர். 
12 பவுன் நகைகள்-பணம் திருட்டு 
பின்னர் காலை 10.30 மணி்க்கு ராஜேஸ்வரி தனது மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக வந்தார். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 
வலைவீச்சு 
இதுகுறித்து ராஜேஸ்வரி கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
 மேலும் தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story