பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி; அதிகாரி ஆய்வு


பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி; அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 29 April 2022 1:22 AM IST (Updated: 29 April 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

காட்டுமன்னார்கோவில், 

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் செல்லும் பாசன வாய்க்கால்கள் ரூ.60 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் காட்டுமன்னார்கோவில் கஸ்பா பகுதியில் நடைபெற்று வந்த பாசன வாய்க்கால்  தூர்வாரும் பணியை சென்னை மண்டல நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர் வெற்றிவேல், நீர்ப்பாசன வாய்க்கால் ஆட்சி மன்றக்குழு தலைவர் கே.டி.பாலமணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story