தண்ணீர் பிடிக்கும் தகராறில் பெண்ணை கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தண்ணீர் பிடிக்கும் தகராறில் பெண்ணை கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.
சிவகங்கை,
தண்ணீர் பிடிக்கும் தகராறில் பெண்ணை கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.
பெண் கொலை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருவுடையார்பட்டியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 47). கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி மாலை 6 மணி அளவில் சீதாலட்சுமி, திருவுடையார்பட்டி கிராமத்தில் உள்ள மோட்டாரில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தண்ணீர் பிடிக்க வந்த ரேவதி (32), வள்ளி (60) ஆகியோருக்கும், சீதாலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அவர்கள் 2 பேரும் சீதாலட்சுமியை கீழே தள்ளிவிட்டனர். இதில் கீழே விழுந்ததில் கல்லில் அடிபட்டு சீதாலட்சுமி படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை மீட்டு திருப்பத்தூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
10 ஆண்டு சிறை தண்டனை
இதுதொடர்பாக திருப்பத்தூர் நகர் போலீசார் ரேவதி மற்றும் வள்ளி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்கள் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, குற்றம்சாட்டப்பட்ட ரேவதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் வள்ளிக்கு ரூ.1,500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story